கமல் மீது பிக்பாஸ் பிரபலம் பாய்ச்சல்!
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிற்கு எதிராக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாக பிரதமர் மோடி, வீடுகளில் விளக்கேற்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படியே, நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் வீடுகளில் விளக்குகளை
ஏற்றினர்.
இந்த நிலையில், பிரதமரின் அறிவிப்பு குறித்து விமர்சித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், எண்ணெய் இல்லை, விளக்கு ஏற்ற முடியுமா..? எனக் கேள்வி கேட்ட கமல், உங்களது தொலைநோக்கு பார்வை தோல்வியடைந்துவிட்டதாகக் கூறினார்.
மேலும், கடினமான சூழலில் இருமுறை நாட்டு மக்களிடம் உரையாற்றி நீங்கள், ஏழை மக்களை புறக்கணித்துவிட்டு, பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக இருக்கிறீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கடிதம் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
Gayatir Raguram Cover
இந்த நிலையில், கமல்ஹாசனை விமர்சித்து பா.ஜ.க.வை சேர்ந்த காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், சீன அதிபர் ஜின்பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்திற்கும் ஏன் நீங்கள் கடிதம் எழுதி, அவர்களது தோல்வியை சுட்டிக்காட்டக் கூடாது..? அரசின் உத்தரவை மதிக்காத பொறுப்பற்ற குடிமக்களுக்கு நீங்கள் கடிதம் எழுதுங்கள். முதலில் தமிழகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதி முறையிடுங்கள்.
பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது டிரெண்டாகிவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையை காட்டியதில், நீங்கள் பங்கெடுக்கவில்லை என உறுத்தவில்லை..? மத்திய, மாநில அரசுகள் கடுமையாக உழைத்து வரும் நிலையில், மேம்போக்க எதையும் எழுத வேண்டாம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

.jpeg
)