குடாநாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!
கொரோனா சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 பேரை மாத்திரமே பரிசோதனை செய்துள்ள நிலையில் அனைவரது மாதிரிகளையும் மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்யவேண்டுமாயின் ஆயிரம் தடவைகள் ஆய்வுகூடச் சோதனைக்குட்படுத்தவேண்டும் எனத்தெரிவித்த அவர், அதனை விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைவிட சிலர் வெளியில் இருக்க முடியும் என்பதனால் கோரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்திவிட்டோம் என கூறமுடியாது.
எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துவைத்து மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டிய நிலைமை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன், யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா தொற்றுப் பரம்பல் அதிகரித்தால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலோ அல்லது மாகாண வைத்தியசாலைகளிலோ போதியளவு வசதிகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் அடையாளப்படுத்திய முதலாவது கொரோனா நோயாளி கொழும்புக்கும் ஏனைய 6 பேரும் வெலிகந்தைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 கோரோனா நோயாளிகள் வரும் போது அங்குள்ள மருத்துவ சேவையாளர்கள் மத்தியில் ஒருவகை அச்சம் உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




