தேவையின்றி வீதிக்கு வந்தோர் பொலிஸாரால் தடுத்துவைப்பு!!
யாழ்நகரில் இன்று மருந்தகங்கள், வங்கிக் கிளைகள் திறந்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.
இதனால் முற்பகல் 10 மணியளவில் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வந்திறங்கிய யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தியதுடன் வாகனங்களில் செல்வோரிடமும் விசாரணை நடத்தினர்.
இதன்போது, மருந்தகங்களுக்கு செல்வதற்கான மருத்துவரின் சிட்டை காண்பித்தவர்களும் அத்தியாவசிய சேவைகளுக்கான அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் காரணமின்றி பயணித்தவர்களை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
மேலும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அவர்களது வாகனங்கள் அசாதாரண நிலை முடியும் வரை தடுத்துவைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




