ஒரு கொரோனா நோயாளியினால் 406 பேருக்கு வைரஸை பரப்ப முடியும்!!
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களில் குறைந்தது அந்த நோயை 406 பேருக்குப் பரப்ப முடியும் என மத்திய சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த எதிர்வரும் 14ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகள் என அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேசமயம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஊரடங்கிற்குப் பின்னர் அது தொடர்கிறது.
இந்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னரும் தொடரலாம் எனவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளன. ஆகவே ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டால் ரயில்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துகள் மீண்டும் முடங்கலாம்.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி லா அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், மாநிலங்களின் இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “கொரோனா வைரஸ் அறிகுறிகள் லேசாக இருப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படத் தேவையில்லை. கொரோனா பரவல் குறித்து இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அதில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றித் திரிந்தால் 30 நாட்களில் குறைந்தது 406 பேருக்கு அந்த வைரஸை பரப்ப முடியும் எனத் தெரியவந்துள்ளது” என்று கூறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




