யாழ்.மாவட்டத்தில் கொரோனா பாதிப்பற்ற பிரதேசங்களில் ஊரடங்கை தளர்த்த ஆலோசனை!!
யாழ்.மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் இடங்கள் தவிர்ந்த மாவட்டத்தின் மற்றய பிரதேசங்களில் பகுதி பகுதியாக ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக யாழ்.மாவட்ட செயலக மட்டத்தில் ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் , அனேகமாக நாளை இது நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
யாழ் மாவட்டத்தில் கொரோனா நோயாளி இனங்காணப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 24ம் திகதி தொடக்கம் ஊரட ங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களே பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட முதல்கட்ட மருத்துவ பரிசோதனையின்போது அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த மற்றய பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக ஆராயப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக பருத்துறை பிரதேசத்திற்கு ஒரு நேரத்திலும்,
தீவக பிரதேசத்திற்கு ஒரு நேரத்திலும், சாவகச்சேரி பிரதேசத்திற்கு ஒரு நேரத்திலும் என பகுதி பகுதியாக ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக ஜனாதிபதி செயலணி - யாழ்.மாவட்ட செயலகம் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் அநேகமாக இந்த நடைமுறை நாளை அமுலாகலாம் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




