ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி,
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3,300-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதுபோன்று பணியாற்றி வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமர் மோடி நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலான இன்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ஏப்.,8-ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர். பாலு கலந்து கொள்வார் எனக் கூறிய ஸ்டாலின், நாட்டில் சுகாதார நிலைமை சீரடைய தேவையான யோசனைகளை வழங்குவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

.jpeg
)