10 பேருடன் இடம்பெற்ற புளியம்பொக்கனை வருடாந்த பொங்கல் உற்சவம்!!

வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்கும் வகையில் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வானது பொது மக்கள் எவரும் இல்லாது அனுமதி வழங்கப்பட்ட ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பூசகர்கள் உள்ளிட்ட 10 பேருடன் இடம்பெற்றுள்ளது.
இன்றைய நாட்களில் நாட்டின் பல பாகங்களிலிருந்து இலட்சக்கணக்கான பொது மக்கள் கலந்துகொள்ள, பறவைக் காவடிகள், காவடிகள், பாற்செம்பு, தீச் சட்டி என அடியவர்களின நேற்றிக் கடன்கள் நிறைவே மிகவும் சிறப்பாக இடம்பெறுவது வழக்கமாகும்.
நாட்டில் தற்போது ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 2020 இற்கான வருடாந்த பொங்கல் நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆலயத்தை சுற்றியும், ஆலயத்திற்கு செல்லும் வீதியெங்கும் இராணுவம், விசேட அதிரடிப்படையினர், பொலீஸார் என அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு ஆலயத்திற்கு வருகின்ற பொது மக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் ஊடகவியலாளர்களும் ஆலய வளாகத்திற்குள் சென்று செய்தி சேகரிக்க படையினராலும் , பொலீஸாராலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.