மின்னல் தாக்கியதில் பாலகி பலி!!
தாய் மற்றும் சகோதரனுடன் சென்ற பத்து வயது சிறுமி ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவமொன்று நேற்று மாலை கொஸ்லந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொஸ்லந்தை பகுதியின் ஓக்வில் தோட்டத்தினைச் சேர்ந்த மோகன்ராஜ் ருக்சி என்ற பத்து வயதுச் சிறுமியே இவ்வாறு மின்னல் தாக்கிஉயிரிழந்துள்ளார்.
மேற்படி சிறுமியும் அவரது தாய் மற்றும் சகோதரனும் சேனைப் பயிர்ச்செய்கையினை பாதுகாக்கவும், காட்டு யானைகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் மரமொன்றின் மேல் குடில் அமைத்து இரவு வேளைகளில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கடும் மழை பெய்து கொண்டிருப்பதையடுத்து இடி மின்னல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் மின்னல் தாக்கி இச்சிறுமி கீழே விழுந்துள்ளார். உடனடியாக சிறுமியை வெல்லவாய அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த சிறுமியின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வெல்லவாய அரசினர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




