ரஷ்யாவில் ஒரேநாளில் 1154 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ரஷ்யாவில் முதல்முறையாக ஒரேநாளில் 1000க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. 

ரஷ்யாவில் இருந்து கிடைத்த சமீபத்திய  அறிக்கைகளின்படி, அந்நாட்டில் புதிதாக 1154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7497-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 58-ஆக அதிகரித்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் மொஸ்கோவில் பாதியளவு முடக்கநிலை அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.