சுவிஸ் பாதிரியார் வந்ததாலேயே

சுவிஸ் பாதிரியார் வந்ததாலேயே பிரச்சினை ஆரம்பித்தது. - சுகாதார சேவைகள் பணிப்பாளர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுமார் ஆயிரத்து 300 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தி வைத்திருந்தோம். எனினும் அந்த நேரத்தில் சுவிஸிலிருந்து வருகை தந்த மதபோதகரால் பிரச்சினை ஆரம்பித்தது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்று இனித் தீவிரமடைந்தால் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாம அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலமையை வைத்துக்கொண்டு தொற்று இல்லை எனக் கூற முடியாது. ஏனென்றால் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் விடுவிப்பதற்கு தயாரான நிலையில் நல்ல உடல்நிலையோடு இருந்தவர்கள். எனினும் பரிசோதனையின் பின்னர் அவர்கள் ஆறு பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் தற்போது  யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருந்ததைவிட மக்கள் கோரோனா வைரஸ் பற்றி விழிபுணர்வடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார்.
Blogger இயக்குவது.