தமிழகத்தில் கொரோனாவால் மற்றுமொருவர் உயிரிழப்பு!
தமிழகம், விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி மாநாட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று (சனிக்கிழமை) காலை இறந்தார். அவர் விழுப்புரம் வண்டிமேடு சிங்காரத்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் என்துடன் பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இதேவேளை, தமிழ்நாட்டில் மொத்தமாக 411 பேர் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




