தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று – பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1372 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 ஆக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை இன்று 1372 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது “தமிழகத்தில் இன்று மட்டும் 82 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 283-ல் இருந்து 365 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.1 சதவீதம் என்ற நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் இதுவரை 35,036 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன” என்றார்.
தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா பாசிட்டிப் உறுதிசெய்யப்பட்ட 49 நபர்களில் 28 பேர் திருப்பூரை சேர்ந்தவர்கள் என்றும், 7 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். அமைச்சரிடம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொள்முதல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியும் கொரோனா பரிசோதனை கிட் கொள்முதல் பணிகளை முன்னெடுத்து செய்து வருபவருமான உமாநாத் அது பற்றி விளக்குவார் என அமைச்சர் விஜயபாஸ்கர் ஒதுங்கிக்கொண்டார். பின்னர் விளக்கமளித்த உமாநாத் ஐ.ஏ.எஸ்., ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழக அரசு அதிக விலைக்கு வாங்கவில்லை என்றும், மத்திய அரசு விலையிலேயே தான் மாநில அரசும் ஆர்டர் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.[என்ன விலை என்று அவர் சொல்லவில்லை]
டெஸ்ட் கருவிகளுக்கான விலையை தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை என்றும் மத்திய அரசு என்ன விலை நிர்ணயம் செய்துள்ளதோ அதன் படியே கொள்முதல் செய்யப்படுவதாக உமாநாத் தெரிவித்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர், 365 பேர் பூரண உடல்நலம் பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.என்றார்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)