தமிழ் இனப்படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள்!

தமிழ் இனஅழிப்பின் பலியாட்களாக நூறாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்  மக்கள்கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளின் 9ஆவது ஆண்டை நாம்நினைவேந்திக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நாள், தமிழின வரலாற்றிலே மிகக் குறுகிய மாதங்களில் சிறிலங்கா அரச படைகளின் அதிஉச்ச சூட்டு வலுவைக் கொண்டும், திட்டமிட்ட பட்டினிச் சாவை ஏற்படுத்தியும், காயப்பட்டமக்களுக்கான மருந்துப்பொருள் விநியோகத்தைத் தடுத்தும் 150,000 வரையான தமிழர்கள் மிகக்கொடூரமாக வதைத்துக் கொன்றொழிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் நாள்.  எமது தேசியத் தலைவரால் நிறுவப்பட்ட தமிழீழ நிழல் அரசாட்சிக்குள் சுதந்திரக் காற்றைசுவாசித்து இறுதிவரை அந்த மண்ணிலே வாழ்ந்து மடிந்த, தேசிய விடுதலைப் போராட்டத்தின்அச்சாணியாக நின்று உயிரூட்டம் தந்த அந்த மக்களை, அந்த மக்களின்ஆன்மாக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்கின்ற ஒரு வரலாற்று நினைவு நாள் இன்று.  கடந்த 2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும் 2009 ஆம் ஆண்டிலும், மக்களுக்குப் பாதுகாப்புத்தருவதாகக் கூறி உலகத்தை ஏமாற்றிக்கொண்டு, 'போர் தவிர்ப்பு வலயம்' என்னும் ஒரு கொலைக்களப் பொறியை ஏற்படுத்தி, அங்கு எமது மக்கள் சென்று தஞ்சமடைந்ததும் அவர்கள் மிகச்சாதாரணமாகக் கொன்றொழிக்கப் பட்டார்கள். அவர்கள், சிங்கள தேசத்தின் கொடிய அடக்குமுறையை எதிர்த்த தமிழ் இறைமையின் பக்கம் நின்றதைத் தவிர எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவித் தமிழர்கள். மனிதகுலத்துக்கு எதிரானஇந்தக் குற்றமானது மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு ஒரு குறிக்கோளுக்காகவேஇழைக்கப்பட்டது.
Blogger இயக்குவது.