பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்!!

இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மீண்டும் தாய் நாட்டுக்கு அழைத்துச் செல்ல பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய இரண்டு கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.


குறித்த இராஜதந்திர பணிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

கொரோனா நோயின் விளைவாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள சர்வதேச விமானங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக மீண்டும் தாய் நாட்டுக்கு செல்ல முடியாமல் இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை அழைத்துச் செல்ல இந்த இரண்டு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

எனினும் நாட்டின் நிலைமையைப் பொறுத்து பிலிப்பைன்ஸ் கப்பல்களில் இருந்து இறங்குவதற்கு எந்தவொரு நபருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

கொரோனாவின் அனைத்து நிலையான சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி அனைத்து பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் கப்பல்களில் பயணிப்பதற்கு முன்னர் முழுமையாக மருத்துவ சோதனைக்ககு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரு கப்பல்களும் இன்று கொழும்பு துறைமுகத்திலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி புறப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Blogger இயக்குவது.