காளான் கிரேவி செய்யும் முறை!!
1. காளான் - 200 கிராம்
2. தக்காளி - 2
3. பெரிய வெங்காயம் - 2
4. இஞ்சி - 1 துண்டு
5. பச்சை மிளகாய் - 2
6. மல்லித்தழை - கால் கப் (பொடியாக நறுக்கியது)
7. நெய் - 2 மேசைக்கரண்டி
8. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - சிறிது
10. மிளகாய்த் தூள் - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
12. வெண்ணெய் - சிறிது
செய்முறை:
1. காளானைக் கழுவிச் சுத்தம் செய்து, விருப்பமான வடிவில் வெட்டவும்.
2. பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
4. ஒரு கடாயில் நெய் சூடாக்கி, அதில் வெங்காயத்தை வதக்கவும்.
5. அது நன்கு சிவந்து வரும் போது, தக்காளி, இஞ்சி, மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
6. பிறகு, அதில் காளான், உப்பு சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி காளான் வெந்ததும் இறக்கி, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




