மட்டு. கரடியனாறில் விபத்து - 6 வயது சிறுவன் பரிதாப பலி!!
மட்டக்களப்பு கரடியனாறு சின்னப்புல்லுமலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் , 6 வயது சிறுவனொருவன் பரிதாபமாக உயிரிழந்தள்ளான்.
அத்துடன் இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்த மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
நொச்சிமுனை தரிசனம் வீதியைச் சேர்ந்த 6 வயதுடைய றொபட் டினேஷ் ஹனபன் ஹொசேயா என்ற சிறுவனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
புல்லுமலை பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ சபை ஒன்றை நடாத்திவரும் போதகர், அவர் மனைவி 2 வயது பெண்பிள்ளை உயிரிழந்த சிறுவன் ஆகியோர் , சபைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சின்ன புல்லுமலை பிரதேசத்தில் வாகனம் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானர்.
இதன்போது சம்பவ இடத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




