கிளிநொச்சியில் கோர விபத்து - தாய் பலி, மகள் காயம்!!
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அதேவேளை, உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் பரந்தன் – பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.
பூநகரித் திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன், கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி செய்திநகர் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சுப்ரமணியம் அன்னலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய அவரின் மகள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த டிப்பர் வாகனம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




