கொள்ளையில் ஈடுபட்டதாக பெண்கள் உட்பட ஐவர் கைது!
யாழ்ப்பாணம், கோப்பாயில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரும் நேற்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி ஊரெழு பகுதியில் மே மாதம் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களைத் தாக்கி காயப்படுத்திவிட்டு வீட்டில் இருந்த பணம், நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கோப்பாய் பொரிஸாருடன் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவரை நேற்று கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையில் ஈடுபடுவதற்குப் பயன்படுத்திய வாள், கோடரி போன்ற ஆயுதங்களும் திருடிய நகைகளை அடைவு வைத்ததற்கான அடைவுச் சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள், 2 சைக்கிள்கள், 4 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றினை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து 2.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இளவாலை, மல்லாகம், உடுவில் பகுதியைச் சேர்ந்த 20 தொடக்கம் 35 வயதுடையவர்கள் என்றும் அவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கைது நடவடிக்கையில் கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வீரசிங்க, மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




