யாழ். குடத்தனையில் இருவர் கைது!!
வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலைச் சேர்ந்த இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த இராசேந்திரம் குலவீரசிங்கம், செல்வகுலசிங்கம் ரதீஸ்வரன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பெண்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்திருந்தது.
இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கில் இன்று காலை பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




