யாழ்.குரும்பசிட்டியில் நள்ளிரவில் வீடு புகுந்து ரவுடிகள் குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வயாவிளான்- குரும்பசிட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.

இந்தசம்பவம் நேற்று இரவு பதினோரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரம் பார்த்து வீடு புகுந்த நபர்கள்,வீட்டு மின் குமிழ்களை முதலில் அடித்து உடைத்துள்ளனர்.
பின்னர் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்துளதுடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து நொருக்கி உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை ஊரடங்கு வேளையில் இவ்வாறு வீட்டுக்குள் புகுந்து கொள்லையர்கள் அட்டகாசம் புரிந்தமை அந்த பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.