மட்டக்களப்பு இளைஞர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பினர்!!

புத்தளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த 46 இளைஞர் நேற்றையதினம் வீடு திரும்பினர்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் வேலைசெய்த இவர்கள் நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சத்தினையடுத்து வீடுதிரும்ப முடியாமல் சிக்கித்தவித்தனர்.
இந்நிலையில், இளைஞர்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து இவ்விளைஞர்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
இவர்கள் சந்திவெளி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், வீடுகளிற்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் அவர்கள் சந்திவெளி பொலிஸ் காப்பரணில் இறக்கப்பட்டு விபரங்கள் பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு புத்தளத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை பூர்த்தி செய்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboo
Blogger இயக்குவது.