உடற்பயிற்சி நிலையங்கள்- முடி திருத்துமிடங்களை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தது பிரேஸில்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் முடி திருத்துமிடங்களை திறந்த நிலையில் இருக்கக்கூடிய அத்தியாவசிய சேவைகளாக பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ அறிவித்துள்ளார்.

நாட்டில் புதிய வைரஸ் தொற்றுகள் மற்றும் இறப்புகள் அதிகரித்துள்ள போதிலும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எளிதாக்குகிறார். இதனை பலரும் பல்வேறு கோணத்தில் நோக்குகின்றனர்.
நோய் பரவுவதைத் தடுப்பதற்கான சமூக தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநில மற்றும் நகராட்சி அரசாங்கங்கள் கடுமையாகச் சென்றுள்ளன என்றும் அது பொருளாதாரத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி வாதிட்டார்.
இந்நிலைமையினை மாற்றியமைக்க எண்ணிய போல்சனாரோ தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த முக்கிய அறிப்பினை வெளியிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், ‘வாழ்க்கையின் கேள்வி வேலைகளுக்கு இணையாக எடுக்கப்பட வேண்டும். பொருளாதாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை, மருத்துவர்கள் இல்லை, மருத்துவமனை பொருட்கள் இல்லை’ என கூறினார்.
நேற்று (திங்கட்கிழமை) பிரேஸில் 5,632 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளையும், இந்த நோயால் 396 இறப்புகளையும் பதிவு செய்துள்ளதால், அதிக நிறுவனங்கள் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கும் போல்சனாரோவின் சமீபத்திய ஆணை வந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் மருந்தகங்கள் மற்றும் மளிகைக் கடைகள் போன்ற நிறுவனங்கள் அவசியம் என்று ஆணையிட்ட பிறகு, போல்சனாரோ பின்னர் அந்த பட்டியலை அதிஷ்டலாப சீட்டுகள் மற்றும் தேவாலயங்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தினார்.
இந்த மூன்றாவது ஆணை அத்தியாவசிய வணிகங்களின் பட்டியலை மேலும் விரிவுபடுத்துகிறது. மேலும் இது தொழில்துறை உற்பத்தி மற்றும் சிவில் கட்டுமானத்திற்கும் விரிவுபடுத்துகிறது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுமென போல்சனாரோ உறுதியளித்தார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.