ஊரடங்கு மீறல்- கடந்த 24 மணி நேரத்தில் 799 பேர் கைது!!

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த காலப்பகுதியில் 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மார்ச் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் மொத்தமாக 51,552 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த காலகட்டத்தில் 13,350 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய 23 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதுடன், இரவு 8 மணிக்கு மீளவும் பிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.