மிக விரைவில் கொழும்பு மற்றும் கம்பஹாவில் ஊரடங்கு தளர்வு!!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது மிக விரைவில் தளர்த்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பணிப்பாளர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில், இலங்கையில் கொரோனா வெற்றிகரமாக தடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கடற்படையினர் மத்தியிலேயே கொரோனா பரவலே காணப்படுகின்றதாகவும் இதனை கருத்திற் கொண்டு வெகு விரைவில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கடற்படையினருக்கு மேலதிகமாக அதிகமான கொரோனா நோயாளிகள் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டனர்.
இலங்கையை பொறுத்தவரையில் கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களிலேயே அதிகமான மக்கள் வாழ்கின்றார்கள்.
இந்நிலையில், தீவிர சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டவுடன் கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகள் விடுவிக்கப்படும் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.