ஜூன் 30 வரை இந்தியாவில் பொது முடக்கம் நீடிப்பு!!
நாடு தழுவிய பொது முடக்கம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொது முடக்கத்தை மத்திய அரசு அமுல்படுத்தியது.
முதல்கட்டமாக கடந்த மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கம், 2ஆம் கட்டமாக மே 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சில தளா்வுகளும் அறிவிக்கப்பட்டன.
நோய்ப் பரவல் கட்டுக்குள் வராத நிலையில், 3ஆம் கட்டமாக மே 4ஆம் திகதி முதல் மே 17ஆம் திகதி வரை பொது முடக்கம் அமுலாக்கப்பட்டது. அப்போதும் கூடுதலாக தளா்வுகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் 4ஆம் கட்டமாக மே 18ஆம் திகதி முதல் மத்திய அரசு அமுல்படுத்தியிருந்த பொது முடக்கம் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனினும், இதர பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையில் விரிவான தளா்வுகளையும் வழங்கியுள்ளது.
அதற்கமைய தமிழகத்தில் ஜூன் 30ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரையில் தடைகள் அப்படியே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும் தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் சில தளர்வுகளுடனும் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய பொது முடக்கத்திலிருந்து பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஜூன் 8ஆம் திகதி முதல் படிப்படியாக விலக்களிக்கப்படும்.
முதல் கட்டமாக வழிபாட்டுத் தலங்கள், வா்த்தக வளாகங்கள், ஹோட்டல்கள்,உணவகங்கள், இதர விருந்தோம்பல் சேவைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2ஆம் கட்டமாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடனான கலந்தாலோசனையின் அடிப்படையில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பது தொடா்பாக ஜூலையில் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




