சிசு ஒன்று சடலமாக மீட்பு!!
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், சிசு ஓன்றை வீட்டின் வளவில் கைவிட்டு சென்ற நிலையில் குறித்த சிசுவை நாய் இழுத்துச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பெண்ணை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய குறித்த பெண் 4 பிள்ளைகளின் தாயார் என்றும் பெண்ணின் கணவர் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பெண், 14 ஆம் கொலனியைச் சோந்த ஒருவருடன் தகாத தொடர்பு வைத்திருந்த நிலையில் பெண் கர்ப்பம் அடைந்த நிலையில் நேற்று முன்தினம் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்தவரை தொடர்புகொண்ட அப்பெண், தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் அதனை எடுத்துச் செல்லுமாறு கையடக்க தொலைபேசியில் தெரிவித்துவிட்டு அங்கு இரவு 7 மணிவரை அவர் காத்திருந்துள்ளார்.
எனினும் குறித்த நபர் அங்கு வராத நிலையில் தனது பிள்ளைகளுக்கு இந்த சிசு பிறந்தது தெரியக் கூடாது என்பதற்காக அச் சிசுவை அங்கேயே கைவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் நேற்று நேற்று காலையில் குழந்தையை கைவிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது குழந்தை காணாமல் போயுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் நாய் ஒன்று இறந்த சிசு ஒன்றின் உடலை இழுத்துச் செல்வதை கண்டு கிராம உத்தியோகத்ததருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து குறித்த சிசுவின் தலை பகுதியை கொண்ட உடலை வெல்லாவெளி பொலிசார் மீட்டதுடன் குழந்தையை பிரசுவித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன்,
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




