சீனாவில் நிலநடுக்கம்: ஐவர் உயிரிழப்பு- 23பேர் காயம்!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், ஐவர் உயிரிழந்ததோடு, 23பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இரவு 9:47 மணியளவில், யுன்னான் மாகாணத்தின் கியாஜியோ கவுண்டியில் ரிக்டர் அளவில் 5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக, சீனா நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கியே இவர்கள் உயிரிழந்ததாக, உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஒப்பீட்டளவில் 8 கிலோமீட்டர் (5 மைல்) மேலோட்டமான ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதேவேளை, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கத்தை 4.5 ரிக்டர் அளவிலும் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்திலும் பட்டியலிட்டது. அதே நேரத்தில் அது தாக்கிய நேரம் மற்றும் மையப்பகுதியின் இருப்பிடம் குறித்து சற்று மாறுபட்ட தரவுகளை அளித்தது. சம்பந்தப்பட்ட பரந்த தூரங்களைக் கருத்தில் கொண்டு இத்தகைய வேறுபாடுகள் இருப்பது வழக்கம்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.