1200 பேர் கொழுபிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு!!

ஊரடங்கு உத்தரவால், தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் இன்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கல்கிசை பொலிஸ் வலயத்தில் 10 பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு மேல் மாகாணத்தில் தற்காலிக தங்குமிடங்கள், வாடகை அறைகளில் தங்கியிருந்தவர்களே, இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் இரத்மலானை புகையிரத மைதானத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு அங்கிருந்து உரிய பகுதிகளுக்கு அனுப்பட்டனர்.
ஏற்கனவே நுகேகொடை பொலிஸ் வலயத்தில் 600 பேர் வரை கடந்த 5 ஆம் திகதி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கடந்த 7 ஆம் திகதியும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேல் மாகாணத்தின் களனி பொலிஸ் பிரிவில் இவ்வாறு சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த 370 பேர் கடந்த சனிக்கிழமை 2 ஆம் திகதி பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பட்டனர்.
மேல் மாகாண ஆளுநர், மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ரொஷான் குணதிலகவின் திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழி நடாத்தலில், இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.