தமிழகத்தின் சென்னை கோயம்பேடு சந்தையில் 2700 பேருக்கு கொரோனா தொற்று

கொரேனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 104 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 2 ஆயிரத்து 753 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளாது

இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் வரிசையில் இந்தியா 11-வது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் இதுவரை 85 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த மணித்தியாலங்களில் 3 ஆயிரத்து 787 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சென்னை கோயம்ப்பேடு சந்தையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் 2 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய சென்னையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 947 ஆக பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது .

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 108 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி நாடாளாவிய முடக்கச்செயற்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வரும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மே மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னரும் ஊரடங்கை நீடிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.