கொரோனாவால் லாபம் ஈட்டும் சீனா- அமெரிக்கா குற்றச்சாட்டு
அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து சீன அரசு மீது அமெரிக்கா தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது.
இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில் சீனா திட்டமிட்டு கொரோனாவை பரப்பியதை மறைப்பதாகத் தெரிவித்துள்ளார். சீனா மீது மறைமுகமாக பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க முற்பட்டு வருகிறது. இதற்காக சீனா கேட்டிருந்த நிதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அதிகமாக லாபம் ஈட்டி வருவது சீனாதான்.அங்கு மாஸ்க், காகிள்ஸ், மருத்துவர்கள் அணியும் கொரோனா பாதுகாப்பு உடைகள் தயாரிக்க மூலக்கூறுகள் உள்ளன. இவற்றை ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் சீனா பெரும் லாபம் ஈட்டுகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனா குறித்து மேலும் பேசிய பாம்பியோ, சீனா சர்வாதிகார நாடுபோல நடந்துகொள்கிறது. உலக சுகாதார நிறுவனத்தை தன் கைக்குள் போட்டுக்கொண்டு கெட்ட ஆட்டம் போடுகிறது. சீனா தான் திட்டமிட்டு அமெரிக்க பொருளாதாரத்தை சரிக்க கொரோனாவை பரப்பியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆதாரம் இல்லாமல் அமெரிக்கா குற்றஞ்சாட்டவில்லை என கூறினார்.

.jpeg
)