விசேட எச்சரிக்கை பெற்றுள்ள இலங்கையின் 10 மாவட்டங்கள்!!
இலங்கையின் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதிக்குள் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




