தீவிபத்தில் வீடு எரிந்து முற்றாக நாசம்!!

மன்னார் எமில் நகர் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஜிம்றோன் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று மதியம் முழுமையாக எரிந்து தீக்கிரையாகி உள்ளநிலையில் வீட்டிலிருந்த பொருட்களும் எரிந்துள்ளன.

கணவன் காலையில் கடற்தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் மனைவி சமைத்துக் கொண்டிருந்த பொழுது திடீரென வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது.
கற்கல் அடுக்கப்பட்டு ஓலையால் மேயப்பட்ட வீடு என்பதால் குறித்த வீடு முழுவதும் வேகமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது .
அதை தொடர்ந்து அயலவர்கள் மற்றும் நகர சபையின் தண்ணீர் பவுசரின் உதவியுடன் குறித்த தீ அணைக்கப்பட்ட போதும் வீடு முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
மூன்று பிள்ளைகளை கொண்ட மிகவும் நடுத்தர குடும்பதை சேர்ந்த இக் குடும்பம் தற்போது தங்குவதற்கு வீடு இல்லாமல் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் கிராம சேவகர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் குறித்த பகுதிக்கு வருகை தந்து நிலைமை தொடர்பான விடயங்களை பார்வையிட்டுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.