பிரான்சில் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து கொரோனாத் தொற்று!!


Yvelines இலுள்ள இரண்டு பாடசாலைகளில் கொரோனாத் தொற்றுப் பேரச்சம் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
இங்குள்ள நகரமான La Celle-Saint-Cloud இலுள்ள Louis-Pasteur பாலர் பாடசாலையிலும், Pierre-et-Marie-Curie ஆரம்பப் பாடசாலையிலும் இன்று பெரும் பதற்றம் தொற்றி உள்ளது.

இந்த இரண்டு பாடசாலைகளிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பயின்று வருகின்றனர். இவர்களின் தந்தைக்குத் தற்போது கொரோனாத் தொற்று உறுதிசெய்ப்பட்டுள்ளது. இவர் இந்த இரண்டு பாடசாலைகளிற்கும வந்து சென்றுள்ளார்.
இந்த இரண்டு பிள்ளைகளும் அனைவரிடமும் பழகியும் உள்ளனர். இந்தப் பிள்ளைகள் இருவரும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உடனடியாக அந்தப் பகுதியின் கல்வித்திணைக்கள அதிகாரி, அந்தப் பகுதியின் வைத்தியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் உடனடியாக ஒரு சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன் மூலம் இங்கு தொற்றுப் பரவல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என வைத்தியர்கள் தெரிவித்ததையடுத்து, அசியரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இப்படிப் பாடசாலைகள் ஆரம்பித்ததிலிருந்து, பிரான்சின் பல பாகங்களிலும் கொரோனாத் தொற்று பாடசாலைகளிற்குள் பரவ ஆரம்பித்துள்ளமை குறித்து, இன்னமும் அரசாங்கம் பெரும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.