கோடைகால விடுமுறை குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி!!
இம்முறை கோடைகால விடுமுறைகள் குறித்த கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பாய்சி- யெலைன்ஸ் நகரத்தின் பாடசாலைக்குச் நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்றிருந்த போது, கோடை விடுமுறைகள் தொடர்பாக அவரிடம் வினவப்பட்டபோதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“எங்களிற்கு விடுமுறைகள் இருக்குமா என்ற கேள்விக்கு இப்போது என்னிடம் பதிலில்லை. இன்னும் சிலகாலம், காத்திருக்க வேண்டும்.
ஜுன் மாதத் தொடக்கத்தில் இது பற்றி ஓரளவிற்குத் தெரியவரும். தொற்று நோயின் தாக்கம் மட்டுமே இதனை முடிவு செய்யமுடியும். நாங்கள் இன்னமும் யுத்தத்தில் வெற்றியடையவில்லை.
வைரஸ் தொற்றினை ஓரளவிற்குக் குறைத்துள்ளோம். அப்படி எமக்கு விடுமுறை சாத்தியமானால், ஐரோப்பாவிற்குள்ளேயே இருப்பது பாதுகாப்பானது. அதையும் சுருக்கி பிரான்ஸிற்குள்ளேயே இருப்பது இன்னமும் பாதுகாப்பானது” என கூறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




