கொரோனா நிலை தொடர்பாக நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்!!

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து போராடி வருவதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், மிகக்கடுமையான துன்பங்களை அனுபவித்த நிலையிலும் மக்கள் தங்கள் பேரழிவை தவிர்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கூட்டு பலமும் ஒற்றுமையும் இந்தியாவின் ஈடு இணையில்லாத அடிப்படையாகும் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பலம் வாய்ந்த செல்வந்தர் நாடுகள் கூட இதற்கு ஈடு இல்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள மோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்,  கைவினைக்கலைஞர்கள்,  சிறுதொழில்களில் உள்ள தொழிலாளர்கள்,  சாலையோர வியாபாரிகள் போன்றவர்கள் மிகப்பெரிய வேதனைகளை அனுபவித்துள்ளமையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டுள்ள அவர்  வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளையும் நடவடிக்கைகளையும் நாட்டு நலனுக்காக எடுத்திருப்பதாகவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.