வீடு உடைத்து திருடியவர் பொலிசாரால் கைது!!

யாழ் மானிப்பாயில் பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகல் வேளையில் மானிப்பாயில் வீடு உடைத்து 4 தங்கப் பவுண் நகை அபகரிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அருகில் இருந்த சிசிரிவி கமராவில் திருட்டில் ஈடுபட்டவர் தொடர்பில் பதிவாகியிருந்தது.
அதனடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரால் திருடப்பட்ட 4 தங்கப் பவுண் நகை யாழ்ப்பாணம் நகரிலுள்ள நகைக் கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் நகைக் கடை உரிமையாளர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.