வேட்பாளார்களின் பதாதைகள் அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!!
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகளை அகற்றும் பணி இன்று தொடக்கம் முன்னெடுக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தேர்தல் தொடர்பான சிறப்புக் கூட்டமொன்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 6 முறைப்பாடுகளின் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளை அகற்றும் பணி இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், முதற்கட்டமாக இன்றைய தினம் சில பதாதைகள்ள் அகற்றப்பட்டதாகவும் கூறினார்.
அத்துடன் ஏனைய பதாதைகளும் உரிய முறைப்பாடுகள் வழங்கப்படும் இடத்தில் அவை அகற்றப்படும் எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
மேலும் இந்தக்கூட்டத்தில் பொலிஸார் மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




