வீடு புகுந்து கொள்ளையர் அட்டகாசம்!!
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்றிரவு ஊடரங்கின் போது, ரவுடிக்கும்பல் ஒன்று, வீடுகளுக்குள் புகுந்து வாகனங்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்து நொருக்கி சேதம் விளைவித்துள்ளதுடன் பெருந்தொகை பணம் நகை என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்றிரவு (06-05-2020) 10.30 மணியளவில் ஊடரங்கின் போது, வீடுகளுக்குள் புகுந்த ரவுடிக்கும்பல் பெறுமதியான பொருட்கள், வாகனம், உழவு இயந்திரம், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த பெண்களையும் தாக்கியதுடன், ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகள் என்பவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




