ரஷ்யா கொவிட்-19 தொற்று தீவிரமாகப் பரவிவரும் நாடாக மாறியுள்ளது!

கடந்த 24 மணித்தியாலங்களில் ரஷ்யாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,817ஆக உள்ளதுடன் மொத்த பாதிப்பு 198,676ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல கடந்த 24 மணிநேரத்தில் 104பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,827ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு தொடர்ச்சியாக நாளுக்கு நாள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து வருகின்றனர்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 164,933பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 31,916பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த வாரம் தொற்றுநோய்களின் எண்ணிக்கையால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியை பின்தள்ளிய ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தொற்று மேலும் தீவிரமாக அதிகரித்தால் ரஷ்யா மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடுமென அஞ்சப்படுகிறது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.