இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா தாக்கத்திற்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கையில் கொரொனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் குவைத்திலிருந்து நாடு திரும்பிய 52 வயதுடைய பெண் ஒருவர் திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்தார். அவர் இருதய நோயாளர்.
இதனியடுத்து உயிரிழந்தவரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்திய நிலையில் அவருக்கு கோரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo