திருகோணமலையில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்!
அண்மையில் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் திருகோணமலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
திருகோணமலை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண், களுத்துறை – பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்றும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்தப் பெண் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமிலிருந்த இரண்டு பெண்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo