குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள்- வைத்தியர் சத்தியமூர்த்தி!!

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் திரும்பிய 5 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய அரியாலையைச் சேர்ந்த ஐவருக்கே இவ்வாறு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட அனைவரும் கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பிய நிலையில் நேற்றைய பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இவ்வாறு இனம் காணப்பட்டவர்கள் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலிலில் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இவ்வாறு அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கு இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றையதினம் 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.