தனிமைப்படுத்தப்பட்டன 4 புதிய இடங்கள்!!
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் ராஜகிரிய, கொலன்னாவ, கண்டியில் உள்ள கொலொம்பிச மற்றும் ஒரு மோதரை அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.
அந்தவகையில் கொலொம்பிசவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர், ராஜகிரியவின் பண்டாரநாயக்கபுரவில் 29 பேர், கொலன்னாவ பகுதியில் 27 பேர், மோதரை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 15 பேர் என மொத்தம் 138 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 138 பேரும் புனானை தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பப்பட்டுள்ளனர் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இதேவேளை ஜா-எலவில் உள்ள சுதுவெல்ல, கிராண்ட்பாஸில் நாகலகம் தெரு, அபயபுர மற்றும் பொலன்னருவையில் உள்ள சோமபுர, குருண்டுவட்ட மற்றும் நாரஹன்பிட்ட உள்ளிட்ட ஆறு நகரங்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவை குறுகிய காலத்திற்குள் விடுவிக்கப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




