மன்னாரில் மக்களின் நடமாட்டமும் பொருட்களும்
மன்னார் மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச்சட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள போதும்,மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் கட்டவில்லை.
மன்னார் நகர் பகுதிக்கு அதிக அளவான மக்கள் வருகை தந்தனர்.எனினும் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
வங்கிகள்,வைத்தியசாலை போன்றவற்றிக்கு அதிகமாக மக்கள் சென்றிருந்தனர்.மேலும் புனித நோன்பு காலம் என்பதினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸீம் மக்கள் தமது நோன்பு கடமைகளுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை மேற்கொண்டுள்ளனர்.
நகரின் ஏனைய பகுதிகளில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)




