விவசாயி ஒருவரின் வாழ்வாதாரம் முல்லைத்தீவில் அழிப்பு!!

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் விவசாயி ஒருவரின் பப்பாசி மரங்கள் மற்றும் தோட்டத்தின் பயிர்களை வெட்டி அழித்த சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.

உடுப்புக்குளம் பகுதியில் செல்லத்தம்பி முத்துறாஜ் என்ற விவசாயி சூரிய மின்கலத்தினை பயன்படுத்தி விவசாயம் மற்றும் பப்பாசி செய்கையில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு சில விசமிகள் தனிப்பட்ட காணத்தினால் இவரின் தோட்டத்திற்குள் புகுந்து பப்பாசி பழ மரங்களை அடியோடு வெட்டி சாய்த்துள்ளார்கள்.
தனிப்பட்ட தகராறின் காரணமாக நான்கிற்கு மேற்பட்டவர்கள் தோட்டத்திற்குள் புகுந்து இவ்வாறான மனிதநேயமற்ற செயற்பாட்டினை செய்துள்ளார்கள்
இதன்போது 126 பயன்தரு பப்பாசி மரங்கள்,சூரிய மின்கலம்,தண்ணீர் பைப்புகள்,முருங்கை மரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதுடன் நீர் பாச்சும் பைப்புக்களும் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.