ஓய்வூதியம் பெறும் விவசாயிகள், மீனவர்களுக்கும் 5000 ரூபா!!
அனைத்து ஓய்வூதியம் பெறும் விவசாயிகள், மற்றும் மீனவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி அவர்கள் இந்தக் கொடுப்பனவை தபாலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமச்சந்திர எபா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் கோவிட் – 19 தொற்று நோயால் நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
அதன்படி, ஓய்வூதியம் பெறும் விவசாயிகள், மீனவர்களுக்கும் மே மாதத்திற்கு இந்த கொடுப்பனவை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாதத்தின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் அருகில் உள்ள தபால் நிலையங்களிலிருந்து இந்த கொடுப்பனவைப் பெறுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 4 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு என 831 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் 4 ஆயிரத்து 200 தபால் நிலையங்கள் மூலம் இந்த கொடுப்பனவை செலுத்துவதற்கு தபால் மா அதிபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் அவசர காலங்களில் ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக ஓய்வூதிய கணக்கு புத்தகத்தை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்த்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




