சிறந்த கால்பந்து வீரர் யார்!!

கால்பந்து விளையாட்டின் இரு துருவங்கள் என கூறப்படும் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டீயானோ ரொனால்டோ ஆகிய வீரர்களில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் கிடைக்கவில்லை. இனி ஒருபோதும் கிடைக்கப் போவதும் இல்லை.

ஆனால் இந்த கேள்வி எப்போதும் ஓய்ந்தபாடில்லை. இந்த கேள்வியை முன்னணி கால்பந்து கழக அணியான லிவர்பூல் கால்பந்து கழக பயிற்சியாளர் ஜூர்கன் க்ளோப்பிடம் கேட்டிருந்தால், அவரது பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிய பலரும் ஆர்வமாக இருப்பீர்கள்.
அதற்கான பதில் இதோ… ‘நீங்கள் சிறந்த கால்பந்து வீரருக்கான வரையறைகளை உருவாக்கினால் அத்தனைக்கும் சரியான பதில்களாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இருப்பார். களத்தில் அவர் காட்டும் வேகம், ஓட்டம், பந்தை கடத்தும் விதம், போட்டியில் அவரின் அணுகுமுறை எல்லாம் அவர் சரியான வீரர் என்பதை உங்களுக்கு உணர்த்தும். ரொனால்டோவை விட மிகச்சரியான தொழில்முறை விளையாட்டு வீரர் இருக்க முடியாது.
ஆனால், களத்தில் என்னை ஈர்ப்பவர் என்றால் அது மெஸ்ஸிதான். எளிமையான அவர், களத்தில் எல்லாவற்றையும் எளிதாக்கி விடுகிறார். அவரின் உடல் தேவைகள் குறைவு. ஒரு வீரராக ஆடுகளத்தில் ரொனால்டாவை விட மெஸ்ஸியை கொஞ்சம் அதிகமாக விரும்புகிறேன். ரொனால்டோ மிகச்சரியான வீரர், ஆனால் மெஸ்ஸி சிறந்த வீரர். அதற்காக ரொனால்டாவை பாராட்டாமல் இருக்க முடியாது’ என கூறினார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.