பாடசாலைக்கான சுற்றறிக்கை அனுப்பிவைப்பு!!

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய பொருத்தமான நடைமுறைகளை மாற்றியமைக்க கல்வி அமைச்சு, மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பான சுற்றறிக்கை மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் என். எச். எம் சித்ரானந்தா தெரிவித்தார்.
பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, சுகாதார நிலமைகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது, க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளில் முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும் அவர் கூறினார் .
அத்துடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட திகதிக்குப் பின்னர்தான் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு ஏற்ப பாடசாலைகளை நடாத்தவேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.