வழமைக்கு திரும்பிய போக்குவரத்து சேவை!!

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், அரச மற்றும் தனியார் பேருந்துகளில் இன்று முதல் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதன்போது, அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைக்கு செல்லும் ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச மற்றும் தனியார்துறையில் கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு முறையான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீர, சம்பந்தப்பட்ட துறையினருடன் நேற்று கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, அனைத்து தனியார்துறை பேருந்துகளையும் இன்று முதல் சேவைகளை ஆரம்பிக்குமாறு தனியார் பேருந்து சங்கங்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையானது அத்தியாவசிய விடயங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, அவசியமற்ற வகையில் பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்துதுறை அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, அரச மற்றும் தனியார்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள பெயர் பட்டியலில் உள்ளவர்கள் மாத்திரமே தொடருந்துகளில் பயணிக்க முடியும் என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, குறித்த பட்டியலில் மேலும் பெயர்களை இணைக்க வேண்டுமாயின் இன்று மாலை 6 மணிவரை அதற்கான அவகாசம் உள்ளதாக தொடருந்து திணைக்கள முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.