அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைப்பு!!

பொதுத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் ஆரம்பமானது.
இதன்போது மனுதாரர்களில் ஒருவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, தனது சமர்ப்பிப்புகளில், மக்கள் உரிமையையும் அவர்களின் இறையாண்மையையும் பாதுகாக்கவே மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தாய் நாடியாக கூறியிருந்தார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் நிலவும் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்ததாக அவர் கூறினார்.
அத்தோடு புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதாக அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.